2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

மாப்பாண முதலியாரின் சீதை அக்னியில் சங்கமம்

Niroshini   / 2021 ஒக்டோபர் 10 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், செந்தூரன் பிரதீபன்

நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாகி இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் பூதவுடல், சற்றுமுன்னர், அக்னி உடன் சங்கமமாகியது.

நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாகி இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் பூதவுடல், நல்லூரிலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக் கிரியைகள் நடைபெற்றன.

 அவரது உடலுக்கு பெருமளவானோர் அஞ்சலி செலுத்தினர். குறிப்பாக அவருடைய உடலுக்கு பொதுமக்களும் அரசியல்வாதிகளும் முக்கியஸ்தர்களும் அஞ்சலி செலுத்தினர்.

இறுதி நிகழ்வுகள், சுகாதார நடைமுறைகள் மிக இறுக்கமாக பின்பற்றப்பட்டு நடைபெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .