2021 செப்டெம்பர் 22, புதன்கிழமை

’சுகாதார நடைமுறை கோவில்களில் பின்பற்றப்படுவதில்லை’

Niroshini   / 2021 ஜூலை 27 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

யாழ்;ப்பாணம் மாவட்டத்தில் உள்ள இந்து கோவில்களில்; சுகாதார நடைமுறை சரியாக பின்பற்றப்படாமை அவதானிக்கப்பட்டுள்ளதாக, யாழ். மாவட்ச் செயலாளர்; க.மகேசன் தெரிவித்தார்

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில், இன்று(27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைதத் அவர், சுகாதார திணைக்கள பணிப்பாளர் நாயகத்தால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, யாழ்ப்பாணம் குடாநாட்டில் இந்து கோவில்களில் பூஜை வழிபாடுகள், திருவிழாக்கள் நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ன எனவும் எனினும், சுகாதார நடைமுறையைப் பின்பற்றாது இந்து கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறுவது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நிலைமை மிகவும் ஆபத்தானதெனவும் கூறினார்.

'திங்கட்கிழமை (26), கரவெட்டிப் பகுதியில் உள்ள கோவில் பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டவர்களில் 49 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இந்த விடயம் தொடர்பில் கரிசனை செலுத்த வேண்டும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .