2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

’தூய்மை தொழிலாளர்களின் அர்ப்பணிப்பை மதியுங்கள்’

Niroshini   / 2021 ஜூன் 07 , பி.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் அமைந்துள்ள வெள்ளநீர் வடிகால் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளால் நிரம்பி காணப்பட்ட நிலையில் ,அவற்றை துப்புரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த வடிகால் கழிவுகள் நிறைந்து காணப்படுவதாக, யாழ்.மாநகர் சபை மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணனுக்கு, அப்பகுதி மக்கள் முறையிட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற மேயர், அவற்றை பார்வையிட்ட்டார்.
அத்துடன்,  உடனடியாக யாழ்.மாநகர சபை தூய்மைப்படுத்தும் தொழிலாளிகளுக்கு அறிவித்து வாய்க்காலை துப்புரவு செய்ய நடவடிக்கை எடுத்தார்.

இதேவேளைஇ மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வெள்ளநீர் வாய்க்கால்களை துப்புரவு செய்து வரும் நிலையில்இ துப்பரவு செய்யப்பட்ட வாய்க்கால்களுக்குள் ஓரிரு கிழமைக்குள் கழிவுகளை பொறுப்பற்ற சிலர் கொட்டி வருகின்றனர்.

இந்நிலைமை,  'யாழ்.மாநகர தூய்மைப்படுத்தும் தொழிலாளிகள், போதிய இயந்திர வலுக்களற்ற நிலையில் பல சிரமங்களுக்கு மத்தியில், மனித வலு மூலமே துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, அவர்களின் அர்ப்பணிப்பான தொழிலை மதித்தாவது, துப்புரவு செய்த வாய்க்காலுக்குள் கழிவுகளை கொட்ட வேண்டாம்' என மேயர் கோரியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .