2022 ஜூலை 04, திங்கட்கிழமை

​டெங்கு காய்ச்சலால் ஜனவரியில் 985 பேர் பாதிப்பு

Editorial   / 2022 பெப்ரவரி 16 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெங்கு காய்ச்சலினால், 2022 ஜனவரி மாதம் மட்டும் 985 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பகுதி அறிவித்துள்ளது. இதில், ஆகக் கூடுதலாக ​கொழும்பு மாவட்டத்தில் 245 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கம்பஹா, களுத்துறை, அநுராதபுரம், ​பொலன்னறுவை, மொனராகலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் ஒருவரேனும் பாதிக்கப்படவில்லை.

பெப்ரவரி மாதத்தில் இதுவரையிலான காலப்பகுதியில் மட்டும் நால்வர் இனங்காணப்பட்டுள்ளனர். அதிலிருவர் கல்முனையிலும் மற்றைய இருவரும் மட்டக்களப்பிலும் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதனடிப்​படையில், நமது நாட்டில் இவ்வாண்டில் இதுவரையிலான காலப்பகுதியில் 989 பேர் டெங்கு காய்ச்சலால் இனங்காணப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .