2022 ஜனவரி 17, திங்கட்கிழமை

சிசுவை உயிருடன் புதைக்கும் முயற்சி முறியடிப்பு

Niroshini   / 2021 நவம்பர் 23 , பி.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்

இளம் பெண் ஒருவருக்கு பிறந்ததாக கருதப்படும் சிசு ஒன்றை அந்த இளம் பெண்ணும்  அவருடைய தாயாரும் உயிருடன் புதைக்க முற்பட்ட நிலையில், அயலவர்களால் அந்த சிசு காப்பாற்றப்பட்ட சம்பவம் ஒன்று, யாழ்ப்பாணம் - தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மட்டுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மட்டுவில் முத்துமாரி அம்மன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில், 18 வயதுடைய இளம் பெண், தன்னுடைய சிசுவை புதைப்பதற்கு குறித்த பெண்ணும் அவருடைய தாயாரும் முனைந்ததாகவும், அதன் போது குழந்தை அழுததால் தாம் அங்கு விரைந்து அசம்பாவிதத்தை உணர்ந்து குழந்தையை மீட்டுக் காப்பாற்றியதாகவும், பொலிஸாரின் விசாரணைகளில் அயலவர்கள் தெரிவித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், சிசு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

அத்துடன்,அவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .