2021 செப்டெம்பர் 19, ஞாயிற்றுக்கிழமை

இராணுவ வீரரின் சடலம் மீட்பு

Niroshini   / 2021 ஜூலை 22 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், என்.ராஜ்

யாழ்ப்பாணம் - நாவற்குழி பகுதியில் உள்ள இராணுவ முகாமொன்றில், இன்று (22) அதிகாலை, இராணுவ வீரர் ஒருவர், துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

நாவற்குழி தெற்கு கெமுனு வோச் படைப்பிரிவு  படை முகாமில் கடமையாற்றிய இராணுவ வீர்ரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர், இராணுவ சேவையில் இணைந்து 10 மாதங்களே ஆகியுள்ளன எனவும், மன அழுத்தம் காரணமாக தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும், சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். 

இந்தச் சம்பவம் தொடர்பில் இராணுவ பொலிஸார்  மற்றும் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .