2023 ஒக்டோபர் 03, செவ்வாய்க்கிழமை

யாழில் பயணிகள் படகு விபத்து

Editorial   / 2023 மே 24 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இருந்து குறிக்கட்டுவான் வரையிலும் பயணித்த பயணிகள் படகு விபத்துக்கு உள்ளாகியுள்ளது. அதில் பயணித்தவர்களை இலங்கை கடற்படையினர் மற்றும் மீனவர்களின் மீன்பிடி படகுகளின் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவில் இருந்து சமுத்திராதேவி என்ற பயணிகள் படகு, குறிக்கட்டுவானை நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளது. எனினும், கடலின் இடைநடுவில் அந்தப் படகின் சுங்கான் செயற்படவில்லை. இதனால், அந்தப் படகு மூழ்கும் அபாயத்தில் இருந்ததாக பயணிகள் அச்சமடைந்தனர்.

இது​தொடர்பில் இலங்கை கடற்படையினரின் கவனத்துக்கு கொண்டுவந்ததை அடுத்து, விரைந்து செயற்பட்ட கட​ற்படையினரும் மீனவ படகுகளும், சமுத்திராதேவி படகில் இருந்த 70 பயணிகளை காப்பாற்றி குறிக்கட்டுவான் ஜெட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .