2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

நாவலர் கலாசார மண்டபத்தை கைமாற்றியமைக்கு எதிராக மகஜர்

Freelancer   / 2023 மார்ச் 28 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிதர்ஷன்

யாழ். மாநகர சபையின் ஆளுகையில் இருந்த நாவலர் கலாசார மண்டபம், வடக்கு மாகாண ஆளுரால் மத்திய அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டமைக்கு எதிராக யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்களின் கையெழுத்து அடங்கிய மகஜர், ஆளுநர் செயலகத்தில் இன்று  (28) கையளிக்கப்பட்டது.

யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் வ.பார்த்தீபன் உள்ளிட்டவர்கள் இந்த மகஜரை கையளித்தனர்.

குறித்த மகஜரில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் கையெழுத்து இடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (N)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X