2021 ஓகஸ்ட் 03, செவ்வாய்க்கிழமை

பயணக் கட்டுப்பாட்டுக்குள் கொள்ளை

Niroshini   / 2021 ஜூன் 08 , பி.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

பயணக் கட்டுப்பாடு அமுலில் நிலையில், திருநகர் வடக்கு மாதர் சங்கத்தின் கட்டிடம் உடைக்கப்பட்டு, கிளிநொச்சி மாவட்ட மாதர் சங்கங்களுக்குச் சொந்தமான தளபாடங்கள், திருநகர் வடக்கு மாதர் சங்கத்தின் தளபாடங்கள், ஆரம்ப சுகாதார நிலையத்தின் உபகரணங்கள் போன்றன களவாடப்பட்டுள்ளன.

தையல் இயந்திரம், கதிரைகள் மற்றும் குழந்தைப் பிள்ளைகளை நிறுத்தும் தராசு போன்றவை திருடப்பட்டுள்ளன.

இதுதொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நாளை (09) காலை 10 மணிக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொள்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததாக மாதர் சங்கத்தினர். தெரிவித்தனர்.

சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து கிளிநொச்சி பொலிஸ் நிலையம் 600 மீட்டர் தொலைவில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .