Niroshini / 2021 நவம்பர் 23 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். நிதர்ஷன்
கனடாவில், தமிழ்த் தேசிய கூட்டமைபின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கலந்துகொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பத்துக்கு, கட்சியின் கனடா கிளையின் கருத்தை கோரியுள்ளதாக, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர், ஞாயிற்றுக்கிழமை (21), கனடாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது, அங்கு வருகைதந்த சிலரால் குழப்பம் ஏற்படுத்தப்பட்டதை அடுத்து, பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
குறித்த சம்பவம் தொடர்பில், நேற்று (22), ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பப்பட்ட போதே, மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதாவது, குறித்த சம்பவம் யாரால், ஏன் ஏற்படுத்தப்பட்டது என்பது தொடர்பில் கட்சியின் கனடா கிளையின் கருத்தை கோரியுள்ளதாக, மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
49 minute ago
55 minute ago
57 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
55 minute ago
57 minute ago
2 hours ago