2021 ஒக்டோபர் 22, வெள்ளிக்கிழமை

குழு மோதல்: ஒருவர் காயம்; இருவர் கைது

Niroshini   / 2021 செப்டெம்பர் 20 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை, முதலியார் கோவில் பகுதியில் நேற்று (19)  இரவு 7 மணியளவில், இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில்,  குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரவு 7 மணியளவில், முதலியார் கோவில் பகுதிக்கு வந்த குழு ஒன்று, அப்பகுதியில் உள்ள வீடொன்றின் மீது  தாக்குதல் நடத்தியதுடன், வீட்டிலிருந்த குடும்பஸ்தர் மீதும் தாக்குதல் நடத்திவிட்டு கதவு, ஜன்னல், வேலி மற்றும் மோட்டார் சைக்கிள்களையும் சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் அறிந்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர், சந்தேகநபர்கள் இருவரை கைது செய்துள்ளதுடன், 7 மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X