Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 மே 20 , மு.ப. 09:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அதிகாலை வேளைகளில் வழிப்பறியில் ஈடுபடும் கும்பலின் கொள்ளைகள் அதிகரித்து செல்வதாகவும், அதனால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும் பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில் அக்கறையின்றி காணப்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கோப்பாய் வீதியில் அதிகாலை 4 மணியளவில் முகத்தினை மறைத்தவாறு தொப்பி அணிந்துகொண்டு கத்திகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் நிற்கும் நான்கு பேர் கொண்ட கும்பல் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிகாலையில் திருநெல்வேலி சந்தைக்கு மரக்கறி கொண்டு வருவோர், இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள், பத்திரிக்கை விநியோகிக்கும் ஊழியர்கள் , தோட்டங்களுக்கு செல்வோரை இலக்கு வைத்து இந்த கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டு வருகின்றது.
இந்த நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் இலங்கை போக்குவரத்து சபையில் சாரதி, உள்ளிட்ட 6 ஊழியர்கள் மற்றும் யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றினை விநியோகத்திற்காக எடுத்து சென்ற ஊழியர் என 7 பேரிடம் இருந்தும் 70 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் அவர்களின் கையடக்க தொலைபேசிகள் என்பவற்றை கத்தி முனையில் வழிப்பறி கொள்ளையடித்துள்ளனர்.
சம்பங்கள் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸார் விரைந்து நடவடிக்கை எடுத்து கொள்ளையர்களை கைது செய்தால் தான் தம்மால் அதிகாலை வேளைகளில் பயமின்றி வேலைகளுக்கு செல்ல முடியும் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். (R)
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago