Gavitha / 2015 செப்டெம்பர் 28 , மு.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.குகன்
கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் கற்று, இறுதிப் பரீட்சைக்குத் தோற்றத் தவறியோர் மற்றும் இறுதிப் பரீட்சையில் சித்தியடையத் தவறியவர்கள், அடிப்படை சித்தி அடைந்தவர்கள் ஆகியோரின் விவரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
எனவே, மேற்குறித்த நிலையிலுள்ளவர்கள் அலுவலக நேரத்தில் வந்து பதிவுகளை மேற்கொள்ளுமாறு ஆசிரிய கலாசாலை அதிபர் வீ.கருணலிங்கம் அறிவித்துள்ளார்.
இறுதிப் பரீட்சைக்குத் தோற்றத் தவறியவர்கள் மற்றும் இறுதிப் பரீட்சையில் சித்தியடையத் தவறியவர்கள் மற்றும் அடிப்படை சித்தியடைந்தவர்களுக்கு விசேட பரீட்சை ஒன்றை நடத்துவதற்கு கல்வியமைச்சு முன்வந்திருப்பதால் விவரங்கள் திரட்டப்படுகின்றன.
சம்பந்தப்பட்டவர்கள், தாம் கலாசாலையில் கல்வி பயின்ற கல்வியாண்டு, பயின்ற பாடநெறி, அடிப்படை சித்தியடைந்த பாடம் உள்ளிட்ட விவரங்களுடன், அலுவலக நேரத்தில் நேரிலோ தொலைபேசி இலக்கம் 021 2230527 மூலமோ தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் எனக் கூறினார்.
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago