2021 செப்டெம்பர் 20, திங்கட்கிழமை

சுற்றுச்சூழல் மற்றும் இயற்கைவள அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ள கழிவகற்றல் நடவடிக்கை தொடர்பாக் ஆராய்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 28 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படவுள்ள விஞ்ஞான ரீதியாக கழிவகற்றல் நடவடிக்கைகளை யாழ். குடாநாட்டிலும் ஆரம்பிப்பது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தர் தலைமையில் நடைபெற்றுள்ளது.

நேற்றுக் காலை அமைச்சரின் யாழ். பணிமனையில் இடம்பெற்ற இக்கூட்டத்திற்கு சுற்றுச்சூழல் அதிகாரசபையின் வெளிக்களப்பணிப்பாளர் எம்.கே.ஜே.லால் பெர்ணான்டோ, சபையின் யாழ். பிராந்திய உதவிப் பணிப்பாளர் திருமதி விஜிதா, யாழ். மாநகரசபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, பிரதி முதல்வர் துஇராஜா இளங்கோ றீகன், யாழ். மாவட்டத்தின் சகல நகரசபைகள் மற்றும் பிரதேச கபைகளின் செயலாளர்கள் மற்றும் உள்ளுராட்சி அதிகாரிகள் ஆகியோர் பங்குகொண்டனர்.

இங்கு  உரையாற்றிய அதிகாரசபையின் வெளிக்களப்பணிப்பாளர் எம்.கே.ஜே.லால் பெர்ணான்டோ, விஞ்ஞான முறைமையிலான கழிவகற்றல் நடவடிக்கைகள் குறித்தும் அதனை செயற்படுத்துவது குறித்தும் விளக்கமளித்தார். இதன் பிரகாரம் இயற்கைவள மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சின் கீழ்வரும் சுற்றுச்சூழல் அதிகாரசபையினால் விஞ்ஞான தொழில்நுட்ப ரீதியில் குப்பைகளை அகற்றுவதற்கு உள்ளுராட்சி சபைகளுக்கு நிதி உதவிகளும் உபகரணங்களும் வழங்கப்படும் எனத்தெரிவித்தார். மேலும் இத்துப்போன குப்பைகளை உரமாகவும் பிளாஸ்டிக் பொருட்களை மாற்று உபயோகத்திற்காகவும் ஏனைய கழிவுகளை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுப்பது தொடர்பான பயிற்சி வழங்கப்படும்.

மேற்கூறிய சகல உதவிகளும் எவ்வித கட்டணமும் இன்றி வழங்கப்படும். இதற்கு உள்ளுராட்சி மன்றங்கள் பொருத்தமானதொரு காணியும் பயிற்சிக்காக ஆளணியினரையும் வழங்க வேண்டும். அத்துடன் யாழ். செயலகத்தில் இயங்கும் மத்திய சூழல் அதிகார சபையில் உரிய உதவிகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.
 
இது தொடர்பாக கருத்து தெரிவித்த உள்ளுராட்சி அமைப்புக்களின் செயலாளர்கள,; ஏற்கனவே தமக்கிடையே ஓர் இணக்கப்பாட்டின் அடிப்படையில் கழிவகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதனால் அனைத்து சபைகளும் தனித்தனியே மேற்படி திட்டத்தினை முன்னெடுப்பது விரயமான நடவடிக்கை என கருத்துத் தெரிவித்தனர். இதனை கவனத்தில் எடுத்துக்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  யாழ். மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சி சபைகள் கொத்தணி அடிப்படையில் இணைந்து இந்நடவடிக்கையினை முன்னெடுக்கலாம் எனத் தெரிவித்த யோசனையினை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இதனடிப்படையில் பிரதேச ரீதியாக ஒன்றிற்கு மேற்பட்ட சபைகள் இணைந்து கழிவகற்றும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதென்றும் அதனை உள்ளுராட்சி உதவி ஆணையாளர் மேற்பார்வை செய்வதெனவும் இணக்கம் காணப்பட்டது.

மற்றொருபுறம் இயற்கைவள மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சின் கீழ்வரும் சுற்றுச்சூழல் அதிகார சபையினால் விஞ்ஞான தொழில்நுட்ப ரீதியில் குப்பபைகளை அகற்றுவதற்கு உள்ளுராட்சி சபைகளுக்கு நிதி உதவிகளும் உபகரணங்களும் வழங்கப்படுவதற்கு மேலாக முறையாக வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கும் சபைகளுக்கு ரக்டர்களும் வழங்கப்படும் என்ற மேலதிக தகவலையும் சபையின் வெளிக்களப்பணிப்பாளர் எம்.கே.ஜே.லால் பெர்ணான்டோ தெரியப்படுத்தினார். அத்துடன் தமது அதிகாரசபையினூடாக யாழ். போதனா வைத்தியசாலை கழிவுகளை விஞ்ஞான ரீதியாக உயிரி வாயுவாக மாற்றி அதனை சமையலுக்கு பயன்படுத்தும் பூர்வாங்க திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்ற மேலதிக தகவலையும் அவர் தெரியப்படுத்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .