Suganthini Ratnam / 2011 மார்ச் 29 , மு.ப. 09:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். தீவகக் கல்வி வலயத்திற்குட்பட்ட வேலணை கிழக்கு மகாவித்தியாலயம் (வகை 2), வேலணை தெற்கு ஐயனார் வித்தியாலயம் (வகை 3), எழுவைதீவு றோ.க.வித்தியாலயம் (வகை 3) ஆகிய பாடசாலைகளின் அதிபர் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் வி.இராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
யாழ். தீவகக் கல்வி வலயத்தில் கடமையாற்றும் இலங்கை அதிபர் சேவை 2-I, 2-II, III Ir; சேர்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. அதிபர் சேவையைச் சேர்ந்தவர்களின் விண்ணப்பங்கள் கிடைக்காதவிடத்து இலங்கை ஆசிரியர் சேவை தரம் - 1, தரம் ௨ஐச் சேர்ந்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுமெனவும் அவர் கூறினார்.
விண்ணப்பப்படிவங்களை தீவக வலயத்தில் பெற்றுக் கொள்ளமுடியும். இதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி 10.04.2011 ஆகுமெனவும் தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.
5 minute ago
10 minute ago
19 minute ago
02 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
10 minute ago
19 minute ago
02 Dec 2025