Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 04 , மு.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
சுன்னாகம் நகரப்பகுதியில் போக்குவரத்துக்கள் அதிகமாகவுள்ள பகல் வேளைகளில் வாகனங்களை பொது இடங்களில் நிறுத்துபவர்கள் மீது பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.
வலிதெற்கு பிரதேசசபையின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் சுன்னாகம் பிரதேசசபையின் பொதுநூலக மண்டபத்தில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோதே, இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.
சுன்னாகம் நகரத்திலுள்ள வர்த்தக நிலையங்களின் முன்பாக வாகனங்களை நிறுத்தி பொருட்களை ஏற்றி இறக்குவதால் போக்குவரத்துக்களை மேற்கொள்ள முடியாதுள்ளதுடன், விபத்துகள் ஏற்படுவதற்கான அபாயங்கள் காணப்படுகின்றன. இதனால் சுன்னாகம் நகரப் பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதை தடைசெய்ய வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.இந்த நிலையில், காலை மற்றும் மாலை வேளைகளிலும் போக்குவரத்துக்கள் குறைந்த வேளையிலும் வர்த்தக நிலையங்களுக்கு வாகனங்கள் பொருட்களை ஏற்றி, இறக்க முடியுமென தெரிவிக்கப்பட்டது. இதனை மீறுபவர்கள் மீது சுன்னாகம் பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானம் எடுக்கப்பட்டது.
8 hours ago
03 Feb 2026
03 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
03 Feb 2026
03 Feb 2026