Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 05 , மு.ப. 07:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். நகரப் பகுதிகளில் பொலித்தீன் பைகளை கண்ட இடங்களில் வீச வேண்டாமென்று பொதுமக்களிடம், யாழ். மாநகரசபை முதல்வர் திருமதி பற்குணராஜ யோகேஸ்வரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ். நகரிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக குவிந்து காணப்படும் பொலித்தீன் பைகள் போக்குவரத்திற்கு இடையூறாகவுள்ளதாகவும் அவர் கூறினார்.
எனவே, வர்த்தக நிலையங்களுக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள கொள்கலன்களில் பொலித்தீன் மற்றும் கழிவுப்பொருட்களை போடுமாறும் இவ்வாறு போடத் தவறும் வர்த்தக நிலைய உரிமையாளர் மீது சுகாதாரத்திற்கு பங்கம் விளைவித்தல் என்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் யாழ். மாநகரசபை முதல்வர் குறிப்பிட்டார்.
8 hours ago
30 Oct 2025
30 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
30 Oct 2025
30 Oct 2025