2022 ஜனவரி 22, சனிக்கிழமை

குறிஞ்சாக்கேணி விபத்து; மூவருக்கு விளக்கமறியல்

Editorial   / 2021 நவம்பர் 25 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக் 

கிண்ணியா, குறிஞ்சாக்கேணியில் பகுதியில் இடம்பெற்ற படகு பாதை விபத்துத் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மூவரையும், டிசெம்பர் மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதவான் ஐ.பி.ரஸாக் உத்தரவிட்டார்.

மோட்டார் பொருத்தப்பட்ட குறித்த படகுப் பாதையை இயக்கிய இருவர் மற்றும் பாதையின் உரிமையாளரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள், பெரிய கிண்ணியா, பெரியாற்றுமுனை மற்றும் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 35 40, மற்றும் 53 வயதுடையவர்கள் ஆவர்.

குறிஞ்சாக்கேணியில் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை (23) மிதப்பு பாதை நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதில், நான்கு சிறுவர்கள் உட்பட 6 பேர் மரணித்ததுடன், 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்த கிண்ணியா பொலிஸார், சந்தேகநபர் ஒருவரையும், திருகோணமலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் இருவரையும் கைது செய்தனர்.

சந்தே நபர்களை, திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் நேற்று (24) பொலிஸார் ஆஜர்படுத்திய போதே, விளக்கமறிறலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X