2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

ஊனமுற்றோருக்கு சக்கர நாற்காழிகள் வழங்கி வைப்பு.

Freelancer   / 2022 ஜூன் 05 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்  

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில், வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற வலது குறைந்தோருக்கு சக்கர நாற்காழிகள் அல்ஹிக்மா பவுண்டேசன் அமைப்பினால்  வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கந்தளாய் பிரதேசசபை உறுப்பினர் ஏ.சி.எம்.ஜவாஹிர் அவர்களின் ஏற்பாட்டில், சக்கர நாற்காழிகள் வழங்கும் நிகழ்வு கந்தளாய் நடுஜும்ஆ பள்ளிவாயலில்  நடைபெற்றது.

 இதன்போது,  பேராறு பகுதியில் உள்ள பத்து பேருக்கு சக்கர நாற்காழிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், அல்ஹிக்மா பவுண்டேசன் அமைப்பின் பணிப்பாளர் எம்.ஏ.இபாதத்துல்லாஹ்
(மௌலவி), கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர் ஏசிஎம்.ஜவாஹிர், பள்ளிவாயல் நிர்வாகிகள் மற்றும் ஊனமுற்ற பொது மக்களும் கலந்து கொண்டார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .