2021 ஒக்டோபர் 22, வெள்ளிக்கிழமை

உறுப்பினர் சபூர்தீன் சனூன் காலமானார்

Princiya Dixci   / 2021 ஓகஸ்ட் 30 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன்

திருகோணமலை நகர சபையில் ஐக்கிய தேசியக் கட்சியின் நீண்டகால உறுப்பினரான சபூர்தீன் சனூன், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக இன்று (30) காலமானார்.

2011ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை சோனகவாடி (09) வட்டாரத்தை பிரதிநிதித்துவபடுத்தி, நகர சபையில் உறுப்பினராக  சேவையாற்றியுள்ளார்.

இவரைக் கௌரவிக்கும் முகமாக, திருகோணமலை நகர சபையில்  உத்தியோகபூர்வ கொடி அரைக்கம்பத்தில் எற்றப்பட்டுள்ளதுடன், தலைவர், உப தலைவர், செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X