2021 ஒக்டோபர் 22, வெள்ளிக்கிழமை

சுத்தமான குடிநீர் இன்றித் தவிக்கும் மக்கள்

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 19 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி, வள்ளுவர் வீதியைச் சேர்ந்த  சுமார் 30 குடும்பங்கள், சுத்தமான குடி நீர் இன்றி கிணற்று நீரினைக் குடித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1996 களில் இருந்து தற்போது வரை குடி நீர் இன்மையால் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்குவதாகவும், கிணற்று நீரினை அருந்துவதால்  சிறு நீரக நோய்,வாந்தி பேதி உள்ளிட்ட தொற்றா நோய் ஏற்படுவதாகவும், குறிப்பாக சிறுவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும்   அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே தங்கள் பகுதிக்கான குடி நீரினை பெற்றுத் தருமாறு உரிய அதிகாரிகளுக்கு அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X