2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

இலவசமாக மண்ணெண்ணெய் வழங்கும் திட்டம் ஆரம்பம்

Freelancer   / 2022 ஜூன் 07 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பைஷல் இஸ்மாயில்

குச்சவெளி பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் மின்சார இணைப்பின்றி வாழுகின்ற குடும்பங்களுக்கும், மிக கஷ்டப்பட்ட நிலைமையில் வாழுகின்ற குடும்பங்களுக்கும் இலவசமாக மண்ணெண்ணெய் வழங்கும் திட்டமொன்றை குச்சவெளி பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபையின் தவிசாளர் ஏ.முபாறக் தெரிவித்தார்.

நாட்டில் நிலவுகின்ற எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அத்தியவசியப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக மிக கஷ்ட நிலைமையில் வாழ்ந்து வருகின்ற குடும்பங்கள், பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களுள், மின்சார வசதியற்று வாழுகின்ற குடும்பங்களுக்கு வீட்டுத் தேவைக்கான மண்ணெண்ணெய்யை இலவசமாக வழங்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதன் ஆரம்பக்கட்டமாக புல்மோட்டை பிரதேசத்துக்கு வழங்க ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் தவிசாளர் மேலும் தெரிவித்தார்.

குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில், இந்நிலைமையில் வாழுகின்ற  குடும்பங்கள் தங்களின் தகவல்களை புல்மோட்டை உப அலுவலக தவிசாளர் காரியாலயத்திற்கு (திருமலை சந்தி) வருகைதந்து, தங்களின் பெயர் விபரங்களை பதிவு செய்து கொண்டு மண்ணெ​ண்ணெயைக்கான டோக்கனை பெற்றுக்கொள்ளுமாறு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .