2021 ஒக்டோபர் 26, செவ்வாய்க்கிழமை

கோவில் நிர்வாகிகளுக்கு விழிப்புணர்வு

Princiya Dixci   / 2021 செப்டெம்பர் 03 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

திருகோணமலை, சம்பூர் பிரதேசத்திலுள்ள கிராமிய மட்ட சமூகக் குழுக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகளுக்கு கொவிட் தொற்றின் தாக்கம் தொடர்பாகவும் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய விழிப்புணர்வுத் தொடர்பாகவும் தெளிவூட்டும் நிகழ்வு, சம்பூர் கலாச்சார மண்டபத்தில் நேற்று (02) நடைபெற்றது.

இவ்விழிப்புணர்வுச் செயற்பாட்டில், திருகோணமலை மாவட்ட தாய் - சேய் சுகாதார வைத்திய அதிகாரி எம்.சமீம், சம்பூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.டபிள்யூ.ஜே.துசார, மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி என்.எம்.எம்.ஹஸ்ஸாலி, சர்வமதத் தலைவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

சம்பூர் பிரதேசத்தில் அண்மைக்காலமாக கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இவ்விழிப்புணர்வுச் செயற்பாடு  முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .