2021 நவம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கோடையை குளிரவைக்கும் முலாம்பழம்

Piriyadharshini   / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

Dr.நி.தர்ஷனோதயன்

MD (S) (Reading) 

முலாம் பழம் அல்லது திரினிப்பழம்,இது வெள்ளரிப்பழத்தை ஒத்த பழம். இதன் விதை வெள்ளரி விதையைப் போலவே இருக்கும். வெள்ளரிப்பழத்தின் விதைகளை நீக்கிவிட்டு உண்பது போலவே இதன் விதைகளையும் நீக்கிவிட்டு உண்ணலாம். வெள்ளரிப் பழத்தின் தோல் மெல்லியதாக இருக்கும். திரினிப் பழத்தின் தோல் கடினமாக, தடிப்பாக இருக்கும். இரண்டுமே இக் கோடைக்காலத்திற்கு மிகவும் உகந்த பழமாகும்.  

இதன் தாயகம் ஈரான் ஆகும். பயன்படுத்தும் பாகங்கள் பழம், விதை. முலாம்பழம்ஏராளமான மருத்துவக் குணங்களைத் தன்னகத்தேக் கொண்டுள்ளது. 

முலாம்பழத்தின் மருத்துவ குணங்கள் பின்வருமாறு:

  • ​உயர் இரத்த அழுத்த கொதிப்பை தடுப்பதுடன்,கண் பார்வையை அதிகரிக்கவும் உதவுகின்றது.
  • உடல் எடையைக் குறைப்பதோடு, நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளவும் பயன்படுகின்றது.
  • நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகளவில் கொடுப்பதுடன், இதில் கொழுப்பு சத்துக்கிடையாது.
  • வயிற்றுப்புண், அல்சரைக் குணப்படுத்தக்கூடியது. மலச்சிக்கல், சீறுநீரகக் கற்கள், நித்திரையின்மை, கர்ப்பிணிப் பெண்களுக்கும் மிகவும் சிறந்த பழமாகும்.
  • இருதயப் பாதுகாப்பில் முலாம்பழம் முக்கியப் பங்கு வகிக்கின்றமைக் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .