2023 ஜூன் 07, புதன்கிழமை

வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளாவுக்கு திரையுலகப் பிரபலங்கள் நிதியுதவி

Editorial   / 2018 ஓகஸ்ட் 17 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் கேரளாவில்ஈ 100 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதன் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகள், நீரில் மூழ்கியுள்ளன. நிலச்சரிவில் சிக்கி, ஒரே நாளில் 25 பேர் பலியாகியுள்ளனர்.

பல பகுதிகளில், மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல இடங்களின் வீதிகள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

இதனால், திரையுலகைச் சேர்ந்த நடிகர், நடிகைகள், கேரள மக்களுக்காக நிதியுதவி அளித்து வருகின்றனர். இதுவரை நிதியுதவி அளித்துள்ள பிரபலங்களின் விவரங்கள், இந்திய மதிப்பில் இதோ!

சிவகார்த்திகேயன்: ரூ.10 இலட்சம், விஜய் தேவரகொண்டா: ரூ. 5 இலட்சம், அல்லு அர்ஜுன்: ரூ. 25 இலட்சம், மம்முட்டி, துல்கர் சல்மான்: ரூ. 25 இலட்சம், அனுபமா பரமேஸ்வரன்: ரூ. 1 இலட்சம், மோகன்லால்: ரூ. 25 இலட்சம், கமல்ஹாசன்: ரூ. 25 இலட்சம், சூர்யா, கார்த்தி: ரூ. 25 இலட்சம், விஷால்: ரூ. 10 இலட்சம், ரோகினி: 2 இலட்சம், ஸ்ரீ பிரியா: 10 இலட்சம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .