2021 செப்டெம்பர் 20, திங்கட்கிழமை

திருமண பந்தத்தில் இணையும் இளவரசர் ஹாரி

Editorial   / 2018 மே 18 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மெக்கன் மார்கல் ஆகியோரின் திருமணம் இங்கிலாந்தில் நாளை நடைபெறவுள்ளதால், இங்கிலாந்து நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் டயானா தம்பதியின் இரண்டாவது மகன் ஹாரி, தனது தோழியும் காதலியுமான அமெரிக்க நடிகை மெக்கன் மார்கலை திருமணம் செய்ய உள்ளதாக, கடந்த ஆண்டு இங்கிலாந்து அரசக் குடும்பம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து அவர்களது திருமணம், மே  மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நாளை (சனிக்கிழமை) இங்கிலாந்தில் உள்ள வின்சர் மாளிகையில், ஹாரி  மற்றும் மெக்கனின் திருமணம் நடைபெறவுள்ளது.

அரசு குடும்பம் திருமணம் என்பதால், இங்கிலாந்து மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் திருமணத்தை பார்பதற்காக வருகை தந்துள்ளனர்.

இங்கிலாந்து முழுவதும் கடைகளில் ஹாரி மற்றும் மெக்கன் மார்கலின் உருவம் பொறிக்கப்பட்ட தொப்பிகள், உடைகள், பொம்மைகள் என் பலவற்றை விற்பனை செய்து வருகின்றனர்.

இளவரசர் ஹாரியை திருமணம் செய்வதன் மூலம் இங்கிலாந்து இளவரசியாகும் முதல் கருப்பின பெண் என்ற பெருமையை மெக்கன் பெற உள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .