2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

மஹிந்தானந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

Freelancer   / 2021 ஒக்டோபர் 17 , பி.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சரியான நேரத்தில் உரத்தை வழங்காமல் விவசாயிகளின் நம்பிக்கையை மீறியதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக   நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கண்டியில் இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற குழுவுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றும் அதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 இந்த அரசாங்கத்தின் கீழ், விவசாயிகள் அர்த்தமற்றவர்களாக மாறிவிட்டனர், விவசாயிகளுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க முடியாது என்றும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .