2021 ஒக்டோபர் 21, வியாழக்கிழமை

’அரசாங்கத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கமில்லை’

Editorial   / 2020 செப்டெம்பர் 29 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு செய்வது தமது நோக்கமில்லை என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார்.

எனினும், ஜனநாயகத்தை  பாதுகாப்பதற்காக 20ஆவது திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிரான எதிரணியினர் இணைந்து ஊடக சந்திப்பொன்றை கொழும்பில் இன்று (29) நடத்தியுள்ளனர்.

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, ஐக்கிய தேசியக் கட்சியின் சார்ப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க,  நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் உள்ளிட்டவர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, அங்கு கருத்து வெளியிடுகையில் கரு ஜயசூரிய இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X