2021 ஜூலை 31, சனிக்கிழமை

சாவகச்சேரியில் வர்த்தகரின் மகன் இனந்தெரியாதோரால் கடத்தல்

Super User   / 2010 மார்ச் 15 , பி.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாவகச்சேரி,மடத்தடி என்னுமிடத்தில் நேற்று முன் தினம் வர்த்தகர் ஒருவரின் மகன் இனந்தெரியாதோரினால் கடத்தப்பட்டுள்ளார் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

கடத்தப்பட்டவரை விடுவிப்பதற்கு மூன்று கோடி ரூபா பணம் வழங்கப்படவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சாவகச்சேரி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடத்தப்பட்டவர் க.பொ.த.சாதாரண தர பரீட்சை எழுதிய சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவராவார்.

வடபகுதியில் பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட பின் இடம்பெற்றுள்ள முதலாவது கடத்தல் சம்பவம் இதுவென்றும் யாழ்ப்பாணத்தகவல்கள் கூறுகின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .