2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

‘சிறிகொத்தாவின் நாடகம்’

Editorial   / 2019 ஜூன் 07 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

- மகேஸ்வரி விஜயனந்தன்  

“முஸ்லிம் அமைச்சர்கள், தங்களுடைய பதவிகளை இராஜினாமா செய்தாலும், அமைச்சர்களுக்கான சலுகைகளை இன்னும் பயன்படுத்துகின்றனர்” எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே “ரிஷாட் மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அதற்கான பொறுப்பை பதவி விலகிய அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.  

நாடாளுமன்றத்தில் நேற்று(06) இடம்பெற்ற இலங்கை மதிப்பீட்டாளர்கள் நிறுவக திருத்தச் சட்டமூல விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கு இலக்கான தேவாலயங்கள் இன்னும் புனரமைப்புச் செய்யப்படவில்லை. இச்சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவர்களுக்கு நிவாரணங்கள் இன்னும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், இதற்கான பொறுப்புகளை எவரும் ஏற்கவில்லை. ஆனால் அரசியல் இலாபங்களைத் தேடுகின்றனர்” என்றார்.  

“எனவே இந்த நிலையில் தான் எதிர்க்கட்சி என்ற ரீதியில் பொறுப்புடன் இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு உதவி செய்ததாகக் கூறப்படும் ரிஷாட்டுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்தோம். இது முழு முஸ்லிம்களுக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை அல்ல. இதை அன்றே விவாதத்துக்கு எடுத்திருந்தால், மினுவாங்கொடை, குளியாப்பிட்டியில் அனர்த்தங்கள் ஏற்பட்டிருக்காது” என்றார்.   

நாம் இன்று முழு முஸ்லிம் மக்களை நாம் சந்தேகிக்கவில்லை. ஏனெனில் எமது கிராமங்களிலுள்ள முஸ்லிம் மக்களைப் பற்றி எமக்குத் தெரியும். அவர்களுக்கு ஆபத்தென்றால் நாம் தான் உதவுவோம். ஆனால் ரிஷாட் பிரிவினைவாதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் ஆதரவளித்துள்ளார். இதற்னகான சாட்சிகள் எம்மிடம் உள்ளன.  

“எனவே ரிஷாட்டுக்கு முதுகெலும்பு இருக்கவேண்டும். அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முகங்கொடுக்க, ஆனால் இதற்காக எல்லா அமைச்சர்களும் பதவி விலகியது சிறந்த விடயமல்ல. இந்த நடவடிக்கை மூலம் சகல முஸ்லிம் மக்களையும் பிரிவினைவாதத்துக்குத் தள்ளும் வேலையில் ஈடுபட வேண்டாம்” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .