Freelancer / 2021 செப்டெம்பர் 11 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக எதிர்காலத்தில் அவற்றின் விலைகள் அதிகரிக்கும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
பல பொருட்கள் ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் இறக்குமதியாளர்கள் தங்கள் விலையை தற்போது அதிகரிப்பார்கள் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனினும், கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு முன்பே சில பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதை சிங்கள ஊடகம் ஒன்று வெளிக்கொண்டுவந்துள்ளது.
முன்பு 250,000 - 275,000 ரூபாய் வரை இருந்த சில கைத்தொலைபேசிகளின் விலை இப்போது 350,000 ரூபாயை தாண்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனினும், புதிய இறக்குமதி கட்டுப்பாடுகள் இந்த பொருட்களின் விலையை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை என்று நிதி அமைச்சகத்தின் மூத்த செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
டொலரின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதே இதன் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார். R
32 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
39 minute ago