2023 செப்டெம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி

Freelancer   / 2023 மே 14 , மு.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் உள்ள 28 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணிகள் 6 மையங்களிலும், மற்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணிகள் மாநிலத்தில் உள்ள 30 மையங்களிலும் இடம்பெற்றுள்ளது.

மொத்தமாகவுள்ள 224 தொகுதிகளில், காங்கிரஸ் கட்சி சுமார் 134 தொகுதிகளில் வெற்றி பெற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவையான இடங்களை விட அதிக தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதன்படி, தனிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X