2022 ஜூலை 02, சனிக்கிழமை

அரசாங்கத்தை பலப்படுத்த பல்முனை ’டீல்’

Editorial   / 2022 மே 14 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.யசி 
 
அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ள நிலையில் தற்போது புதிய அமைச்சரவை ஒன்றினை உருவாக்கிக்கொள்வதில் அவர் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றார். 

இந்நிலையில் வெவ்வேறு நாடுகளுக்கான இலங்கை தூதுவர்கள் முலமாக இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகளின் முக்கிய உறுப்பினர்களை தொடர்புகொண்டு இணக்கப்பாடு ஒன்றினை எட்டுவதற்கான முயற்சியில் அதி தீவிரமாக ஈடுபட்டு வருவதாக நம்பத்தகுந்த அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரிய வருகின்றது.
 
மஹிந்த ராஜபக்‌ஷ தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்த பின்னர் நாட்டில் ஏற்பட்ட அராஜக நிலைமை மற்றும் அவசரகால சட்டத்தை பிறப்பித்து மக்களின் வன்முறை செயற்பாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்ட நேரத்தில் இருந்தே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடி வந்ததுடன் அவரையே பிரதமராக நியமிக்க தீர்மானத்தை எடுத்திருந்ததாகவும், 

இது குறித்து ராஜபக் ஷவினருக்கு மிக நெருக்கமான வெளிநாடுகளுக்கான இலங்கை தூதுவர்களுடன் கலந்துரையாடியதாகவும் தெரிய வருகின்றது. 

இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்க தான் பிரதமராக பதவி ஏற்றுக்கொள்ள முன்னரே  ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களுடனும், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் பஷில் தரப்பினருப்பிடன் கலந்துரையாடியுள்ளார். அதேபோல்  வெவ்வேறு தரப்புடனும் அவர் கலந்துரையாடியுள்ளார். 

எனினும், அவர்கள் புதிய அமைச்சரவையில் இணைந்துகொள்வதற்கான இணக்கப்பாட்டிற்கு வராத நிலையில் வெவ்வேறு தூதுவர்கள் மூலமாக "டீல்" செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தற்போதும் எதிர்க்கட்சியின் பிரதான நபர்கள் எனக் கருதப்படும் தகுதிவாய்ந்த அரசியல் தலைமைகளுடன் வெவ்வேறு நாடுகளின் தூதுவர்கள் கலந்துரையாடி வருவதாகவும், இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதியும் உயர் ஸ்தானிகருமான வேலுப்பிள்ளை கனநாதன் ரணிலுக்கு உறுப்பினர் எண்ணிக்கையை பெற்றுக்கொடுக்கும் விதமாக எதிர்க்கட்சியின் பல உறுப்பினர்களுடன் தொடர்ச்சியாக கலந்துரையாடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

அவர்களுடனுன் நடத்திய பேச்சுவார்த்தைகளில் ஒரு சிலரை இணக்கத்துக்கு கொண்டுவந்துள்ள போதிலும் தற்போதைய அரசியல் நெருக்கடி நிலைமைகள் மற்றும் ராஜபக்‌ஷ  மீதான மக்கள் எதிர்ப்பு காரணமாக இறுதி நேரத்தில் அவர்கள் பின்வாங்கியுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் உறுதிப்படுத்த முடிந்துள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .