Editorial / 2019 ஜூன் 20 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தௌஹீத் ஜமாஅத் அமைப்புடன் தான் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்களுக்குத் தொடர்பு இருப்பதை முடிந்தால் நிருபிக்குமாறு, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் சாலிக்கு சவால் விடுப்பதாக தபால் சேவைகள், முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சர் அப்துல் ஹலீம் சவால் விடுத்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பில், விசாரணைகளை முன்னெடுத்து வரும் நாடாளுமன்ற விசேடத் தெரிவுக்குழுவில் சாட்சியாளராகக் கலந்துக்கொண்ட முன்னாள் ஆளுநர் அஸாத் சாலி தெரிவித்த கருத்துக்கள் குறித்து, அமைச்சர் ஹலீம் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்டத்தில் சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளைத் தான் இழக்க வேண்டும் என்பதற்காகவே அஸாத் சாலி இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அஸாத் சாலி ஹஜ் குழுவின் உறுப்புரிமையை கோரியிருந்த போது, அதனை வழங்காமை, கண்டி மாவட்டத்தில் அவர் தேர்தலில் போட்டியிட்ட போது, தன்னுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாகவே அவர் தன்மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
13 minute ago
22 minute ago
29 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
22 minute ago
29 minute ago
37 minute ago