Freelancer / 2021 ஒக்டோபர் 26 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல்கலைக்கழகங்களைத் திறப்பதற்கான அதிகாரம், துணை வேந்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், எந்த நேரத்திலும் பல்கலைக்கழகங்களை அவர்கள் ஆரம்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
எந்தெந்த பீடங்களை முதலில் அழைக்க வேண்டும் என்பதை துணை வேந்தர்கள் தீர்மானிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இன்று (26) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்ட விடயத்தை அவர் குறிப்பிட்டார்.
கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியின் இரண்டு டோஸ்களைப் பெற்று இரண்டு வாரங்களைப் பூர்த்திசெய்த மாணவர்கள் மட்டுமே, முதலாவது கட்டத்தின் கீழ் விரிவுரைகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முதல் கட்டத்தின் கீழ் 25 சதவீத மாணவர்களை மாத்திரம் கொண்டு வகுப்புகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சில பல்கலைகழக கட்டடங்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பேராசிரியர், நாட்டின் நிலையைக் கருத்திற் கொண்டு குறித்த கட்டடங்களை விடுவித்ததன் பின்னர், பல்கலைகழங்களை ஆரம்பிக்க வாய்ப்புகள் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டின் விரைவான பரவல் காரணமாக அரச பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டிருந்த போதும், சில ஆசிரியர் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்திருந்த சம்பள முரண்பாடுகள் தொடர்பான போராட்டத்தை கைவிடும் வரை பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஒன்லைனில் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
8 hours ago
30 Oct 2025
30 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
30 Oct 2025
30 Oct 2025