2021 செப்டெம்பர் 22, புதன்கிழமை

’நாடெங்கும் டெல்டா தொற்றாளர்கள் இருக்கக்கூடும்’

Freelancer   / 2021 ஜூலை 26 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா வைரஸின் டெல்டா திரிபு தொற்றுக்குள்ளானோர் இருக்கக் கூடும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், விஷேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அடுத்துவரும் மாதங்களில் டெல்டா திரிபு அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மேலும், நேற்றைய தினம் இனங்காணப்பட்ட தொற்றாளர்களுள் சிலர் டெல்டா திரிபு தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .