2021 செப்டெம்பர் 21, செவ்வாய்க்கிழமை

எக்ஸ்பிரஸ் பேர்ல் VDR சாதனம் இரசாயன பரிசோதனைக்கு

J.A. George   / 2021 ஜூன் 15 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு கடற்பகுதியில் தீப்பற்றி எரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின்  VDR சாதனம், அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனத்தில் கப்பலின் பயண தகவல் மற்றும் தகவல் தொடர்பு நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

VDR சாதனத்தின் மேலதிக தரவு பகுப்பாய்வுக்கான அதன் தாய் நிறுவனத்தின் ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்ளவேண்டியது அவசியம் என்று அரச இரசாயன பகுப்பாய்வாளர் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை, குறித்த கப்பலின் கெப்டன், நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .