2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

எல்லையைக் கடப்பதற்கு கனநேரம் காத்திருப்பு

Freelancer   / 2021 ஒக்டோபர் 16 , பி.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐந்து நாட்கள் விடுமுறை நெருங்குவதன் காரணமாக மேல் மாகாணத்திலிருந்து தென் மாகாணத்துக்கு செல்வதற்காக அதிவேக நெடுஞ்சாலையின் வெலிபென்ன நுழைவாயிலுக்கு அருகில் பல கிலோ மீற்றர் நீளத்துக்கு வாகனங்கள் காணப்பட்டன.

சுமார் ஒன்பது மணி நேரத்துக்குள் வெலிபென்ன நுழைவாயிலுக்கு வந்த வாகனங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அனுமதியின்றி தென் மாகாணத்துக்குள் நுழைய முயன்ற வாகனங்கள் திருப்பி விடப்பட்டதாக வெலிபென்ன அதிவேக நெடுஞ்சாலை பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிபென்ன நுழைவாயிலில் மேற்கொள்ளப்பட்ட கடுமையான சோதனை காரணமாக, வாகன ஓட்டுநர்கள் ஒரே இடத்தில் மணிக் கணக்கில் காத்திருக்க வேண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .