2023 ஜூன் 07, புதன்கிழமை

விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

Freelancer   / 2023 மார்ச் 19 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான  வீதியின் அராலிச்சந்தி பகுதியில் நேற்று (18) இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஊர்காவல்துறை  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹம்பஹா பகுதியில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்த பேருந்து பட்டாவாகனத்தை மோதியதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

சம்பவ இடத்தில் மூன்றாம் கட்டை ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பாலா ராஜா ஜனட்மாறன் (வயது 25) என்ற இளைஞன்  உயிரிழந்துள்ளார்.

ஊர்காவல் துறை பகுதிக்கு பிட்டிங் வேலை ஒன்றுக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த பட்டா வாகனத்துடன் நயினாதீவு ஆலய வழிபாட்டுக்கு சென்று விட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த பேருந்து அராலிச்சந்தியில் மோதி விபத்தினை ஏற்படுத்தி இருந்தது.

விபத்துடன் தொடர்புடைய கம்பஹா கிரிந்திவெல பகுதியைச் சேர்ந்த வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர், (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .