2021 ஒக்டோபர் 21, வியாழக்கிழமை

தடுப்பூசி அட்டை கட்டாயமா?

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 21 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொரோனா தடுப்பூசி அட்டையை வைத்திருப்பது கட்டாயமாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர் என சுகாதார
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

சட்டரீதியான விஷயங்கள் உட்பட, அத்தகைய நடவடிக்கையை அமல்படுத்துவதற்கான அனைத்து அம்சங்களும் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்துள்ள அவர், அனைவருக்கும், முழுமையான தடுப்பூசி போடப்பட்ட பின்னரே தடுப்பூசி அட்டையை
கட்டாயமாக்குவது தொடர்பில் உரிய நடவடிக்கை அமல்படுத்தப்படும் என்றார்.

இதேவேளை, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான வீட்டுக்கச் சென்று தடுப்பூசியை செலுத்தும் செயற்றிட்டம் மென்மேலும் துரிதப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X