2021 ஜூலை 28, புதன்கிழமை

பலஸ்தீனம் போல் வடக்கிலிருந்தும் படைகள் வாபஸ் வாங்கப்படவேண்டும் - சுரேஷ் பிரேமச்சந்திரன்

Super User   / 2010 ஏப்ரல் 18 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலஸ்தீனத்திலிருந்து இஸ்ரேலியப்படைகளை வாபஸ் வாங்கவேண்டும் என்பது போல,வட பகுதியிலிருந்து சிங்களப்படைகளும் தமிழர் பகுதிகளிலிருந்து  வெளியேறவேண்டும்.

இவ்வாறு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.பாதுகாப்புச்சபையில் இலங்கையின் நிரந்தரப்பிரதிநிதி பந்துல ஜயசேகர விடுத்துள்ள வேண்டுகோளை தமிழ் தேசியக்கூட்டமைப்பு வரவேற்கின்றது. 

இதே நிலை இலங்கையிலும் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அவ்வறிக்கையில் சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .