Editorial / 2022 ஜனவரி 09 , பி.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த நங்கநல்லூர் இந்து காலனி 2ஆவது மெயின் ரோட்டை சேர்ந்தவர் மனோவ் பட்நாயக், இவருடைய மகள் அனன்யா (வயது 17). இவர், அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
இவரது வீட்டின் மேல்மாடியில், வெயிலில் காய வைத்து இருந்த சிறிய தலையணை அருகில் உள்ள புங்கமரத்தில் விழுந்துவிட்டது. மாணவி அனன்யா, பால்கனியில் இருந்தபடி நீண்ட அலுமினிய குழாய் மூலம் மரத்தில் விழுந்த தலையணையை எடுக்க முயன்றார்.
அப்போது அவரது கையில் இருந்த அலுமினிய கம்பி, தெருவில் சென்ற உயர் மின் அழுத்த கம்பியில் உரசியதால் அவரை மின்சாரம் தாக்கியது. இதில் வலது கையில் பலத்த தீக்காயம் அடைந்த மாணவி அனன்யா மயங்கி விழுந்தார்.
உடனே அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மாணவி அனன்யா ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த பழவந்தாங்கல் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
49 minute ago
56 minute ago
3 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
56 minute ago
3 hours ago
05 Nov 2025