2023 செப்டெம்பர் 27, புதன்கிழமை

மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பு

Freelancer   / 2023 மார்ச் 22 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்களால் நாளை (23) பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாமையினால் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

கடந்த 13 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டுள்ள மெதுவாக பணிபுரியும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தொழிற்சங்க தலைவர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மீண்டும் பரீட்சை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.  (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .