2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

அமைச்சர் அதாவுல்லாவின் தேர்தல் பிரசாரங்களுக்காக பாடசாலைகளுக்கு மூடுவிழா

Super User   / 2010 மார்ச் 24 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிடும் அமைச்சர்  ஏ.எல்.எம்.அதாவுல்லாவின் தேர்தல் பிரசாரங்களுக்காக  பொத்துவில் தேர்தல் தொகுதியிலுள்ள 10 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

மேற்படி 10 பாடசாலைகளைச் சேர்ந்த  ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு மத்தியில் கல்விக் கருத்தரங்கு போன்றதொரு தேர்தல் பிரசாரத்தை ஏ.எல்.எம்.அதாவுல்லா மேற்கொண்டிருந்தார்.

பொத்துவில் மத்திய கல்லூரி, அல் இல்ஸான் வித்தியாலயம், அல் அஷ்ரப் வித்தியாலயம், அல் பஹூ ஜா வித்தியாலயம், அல் வித்திய வித்தியாலயம், அல் முவ்வரா வித்தியாலயம், அல் அக்ஸா வித்தியாலயம், அல் மீனா வித்தியாலயம், அல் அபயன் வித்தியாலயம், அஸ்லாம் வித்தியாலயம், அல் மஸ்மியா வித்தியாலயம், அல் ஹிஜ்ரா வித்தியாலயம், தருஸ்சலாம் வித்தியாலயம் ஆகியனவே மூடப்பட்ட இந்தப் 10 பாடசாலைகளும் ஆகும்.

இது குறித்து அம்பாறை மாவட்டத்தின் உதவித் தேர்தல்கள் ஆணையாளர் பண்டார மாபாவிடம், ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர் வசந்த பியதிஸ்ஸ முறைப்பாடு செய்துள்ளார்.

இதனை அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் உறுதிப்படுத்தினார். எனினும், காலதாமதமாக  முறைப்பாடு கிடைக்கப் பெற்றிருப்பதால் எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளமுடியாது எனவும் அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .