2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

’அரசாங்கத்தின் தாக்குதலை முறியடிப்போம்’

Nirosh   / 2021 ஜூலை 28 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜோன் கொத்தலாவ பாதுகாப்புப் பல்கலைக்கழத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல இடமளிக்க வேண்டுமென தெரிவிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாஸ, அரசாங்கம் கொண்டுவந்துள்ள சட்டமூலத்தை தோற்டிக்க ஐ.ம.ச முன்நிற்கும் எனவும் தெரிவித்தார்.

இதுதொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் இதுவரையில் நடத்தி செல்லப்பட்ட வகையில் தொடர்ந்து அதனை நடத்திச் செல்வதற்கு இடமளிக்கப்பட வேண்டும் என்றார்.

அரசாங்கம் கொண்டுவந்துள்ள, ஜோன் கொத்தலாவ பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலமானது, இலவச கல்வி மீது அரசாங்கம் முன்னெடுக்கும் பாரதூரமான தாக்குதல் எனவும், இந்தத் தாக்குதலை ஐக்கிய மக்கள் சக்தி தோற்கடிக்கும் எனவும் தெரிவித்தார்.

வாய் பேச்சில் மாத்திரமல்லாது, நடைமுறையிலும் இச்சட்டமூலத்தை தோற்கடிக்க ஐக்கிய மக்கள் சக்தி முன்நிற்கும் எனவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .