Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2021 ஜூலை 27 , மு.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலைய தமிழ்ச் சமூகம், இன்று சந்தித்திருக்கும் சவால்களை கூட்டிணைந்து சந்திக்கவேண்டுமெனத் தெரிவித்துள்ள தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்.பி, நான்கு செயற்பாட்டார்கள் முக்கியமானவர்கள் என வலியுறுத்தியுள்ளார்.
சமூக கூறுகளான அரசியல், சட்டத்துறை, சிவில் சமூக, தொழில் வர்த்தகத்துறை ஆகிய நான்கு செயற்பாட்டாளர்களே ஒன்றிணைய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள அவர், ஒவ்வொரு கூறுகளும் தத்தமது பணியை கூட்டுப்பொறுப்புடன் நிறைவேற்ற வேண்டுமெனக்
கேட்டுக்கொண்டார்.
மலையக சட்டத்துறை மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளுடன் சந்திப்பு, கட்சி அலுவலகத்தில் நேற்று (26) இடம்பெற்றது. இதன்போதே, மனோ எம்.பி மேற்கண்டவாறு வலியுறுத்தினார். முழு இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களும் வீட்டுப் பணியாளர்களும் அல்லர். தோட்டத்தொழிலாளர்களும் அல்லர்.
இப்படியான ஒரு கருத்தை ஒருசில இனவாதிகள் நிறுவ முயல்கிறார்கள். இது சூட்சுமம் நிறைந்த கருத்து. இது திட்டமிட்டு பரப்பப்படுகிறது என்று தெரிவித்த மனோ கணேசன் எம்.பி,
முதலில் நாம் ஒன்றுகூடி இந்தக் கருத்தை முறியடிக்க வேண்டும் என்றார்.
“மலையக சமூகம் இன்று வளர்ந்து வருகிறது. அந்தச் சமூகத்தில் மிகவும் பின்தங்கிய ஒரு பிரிவினர்தான் இரண்டு இலட்சம் தோட்டத்தொழிலாளர்கள். இவர்களை கைத்தூக்கி விட
வேண்டிய கடப்பாடு, மலையக அரசியல், சட்டத்துறை, சிவில் சமூக, தொழில் வர்த்தகதுறை செயற்பாட்டாளர்களுக்கு இருக்கின்றது” என்றார்.
10 minute ago
35 minute ago
37 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
35 minute ago
37 minute ago
48 minute ago