2021 ஒக்டோபர் 28, வியாழக்கிழமை

சிறைச்சாலைகளில் சிசிடிவி கெமராக்களே இல்லை

Freelancer   / 2021 செப்டெம்பர் 18 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலையில் இதுவரை சிசிடிவி கெமராக்கள் இதுவரை பொருத்தப்படவில்லை என சிங்கள ஊடகம் ஒன்று நடத்திய தேடுதலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையில் சிறை மருத்துவமனை, மகளிர் சிறை, கொழும்பு விளக்கமறியல் சிறை மற்றும் மெகசின் சிறை , கொழும்பு சிறை வளாகத்திலேயே சிசிடிவி அமைந்துள்ளன.

வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலையில் சிசிடிவி கெமராக்கள் இல்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சிறைகளில் சிசிடிவி கெமராக்களை நிறுவுவதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. 

பணியை முடிக்க இன்னும் மூன்று மாதங்கள் ஆகும் என்று சிறைத்துறை கூறியது. 

மேலும், அனுராதபுரம் சிறைச்சாலையில் சிசிடிவி கெமராக்கள் பொருத்த இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்த மது போதையில் வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் நுழைந்து கைதிகளை அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.

எனினும், இந்த குற்றச்சாட்டை  லோஹான் ரத்வத்த நிராகரிப்பதாக கூறியிருந்தார். மேலும், சிறைக்குள் அவருக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்பட்டு வருவதாகவும் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து சிறைத் துறை ஏற்கனவே சிறப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இது தொடர்பில், முதலில் அனுராதபுரம் சிறைச்சாலையின் அதிகாரிகள் மற்றும் கைதிகளிடம் இருந்து வாக்குமூலம் பெறப்பட்டதாக சிறைத்துறை ஆணையர் கூறினார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .