Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Ilango Bharathy / 2021 ஜூலை 27 , மு.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எனக்கு அறிவிக்கப்பட்ட வகையில் மிக விரைவில், யாழ். மாவட்டத்துக்கு தமிழ் பேச முடியாத ஒருவரை மாவட்டச் செயலாளர் / அரசாங்க அதிபர் பதவியிக்கு நியமிக்கப்பட இருக்கிறார். ஆகையால், அவ்வாறு முடிவு எடுக்கப்பட்டிருக்குமாயின், அம்முடிவை மீள் பரிசீலனை செய்யுமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நீங்கள் அறிந்திருக்கின்ற பிரகாரம், யாழ் மாவட்டத்தில் 95 சதவீதமானவர்கள் தமிழ் பேசும் சமூகத்தினராவர். மேலும், 10 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏனைய நிர்வாகத்தினை சேர்ந்தவர்களும் தமிழ் பேசும் சமூகத்தை சார்ந்தவர்களாவர் என்றும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில் தமிழ் பேச தெரியாத ஓர் அரச உத்தியோகத்தரை மாவட்டச் செயலாளர் / அரசாங்க அதிபராக யாழ். மாவட்டத்துக்கு நியமிப்பது பொருத்தமற்ற ஒரு விடயமாகும். மேலும், இது ஜனநாயக விரோதமான செயலாகும் என்றும் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்திலுள்ள உயர் பதவியில் இருக்கும் அரச உத்தியோகத்தர் தமிழ் பேசும் ஒருவராக இருக்கும் சந்தர்ப்பத்தில்தான் அவருடனான வாய்மூல மற்றும் எழுத்ததுமூல தொடர்பாடல்கள் பயனுள்ளதாக இருக்குமென தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள சம்பந்தன், எனவே, அத்தகைய பிரேரணையை மீளாய்வு செய்யுமாறும் கேட்டுகு்கொண்டுள்ளார்.
“தமிழ் மக்களின் வரலாற்று ரீதியான பூர்வீக இடங்களான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புதிய அரசியலமைப்பின் ஊடாக அதியுச்ச அதிகார பகிர்வை வழங்க அரசாங்கம் முயற்சிகளை எடுக்கும் சந்தர்ப்பத்தில் இத்தகைய செயற்பாடுகள் எதிர்மறையான விளைவினையும் மக்களால் வரவேற்கப்பட முடியாத ஒன்றாகவுமே காணப்படுகின்றது” என்றும் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
எனவே, அத்தகைய பிரேரணையை மீளாய்வு செய்து, மேற்குறித்த விடயங்களை
கருத்திக்கொண்டு, யாழ். மாவட்டத்தின் மாவட்டச் செயலாளர் / அரசாங்க அதிபராக அனுபவமும் செயற்திறனுமுள்ள தமிழ் பேசும் ஓர் அரச அதிகாரியை நியமிக்குமாறும் அக்கடிதத்தின் ஊடாக கேட்டுக்கொண்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Jul 2025