Nirosh / 2021 ஓகஸ்ட் 03 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்க ஊழியர்களை மீண்டும் பணிகளுக்கு அமர்த்துவதற்கு எடுக்கப்பட்டத் தீர்மானம் ஜனாதிபதியின் தனித் தீர்மானம் இல்லை எனத் தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, பொருளாதாரத்தைப் பலப்படுத்த நாட்டை திறக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர் நாமல், டெல்டா வைரஸ் என்பது இலங்கைக்கு மாத்திரமானப் பிரச்சினை இல்லை. உலகம் முழுவதும் இப்பிரச்சினைக்கு முகங்கொடுத்து வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இப்பிரச்சினைக்குத் தடுப்பூசி செலுத்துவதே ஒரே தீர்வு என உலக தலைவர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்த நாமல், நாட்டில் 30 சதவீதமானோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில் அரசாங்க ஊழியர்களைப் பணிக்கு அமர்த்துவதுத் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் ஜனாதிபதியின் தனிப்பட்டத் தீர்மானம் இல்லை எனவும், சுகாதார வைத்திய நிபுணர்களின் அறிவுரைகளுக்கு அமையவே தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சுகாதார வைத்திய நிபுணர்களுக்கும் இதுதொடர்பில் கருத்து முரண்பாடுகள் காணப்பட்டாலும், பெரும்பான்மையானோர் நாட்டை தொடர்ந்து இவ்வாறு மூடி வைத்திருந்துவிட்டு திறப்பதால், தொற்று அதிகரிக்குமென கருதுவதாகவும் கூறினார்.
பொருளாதார ரீதியாக நாட்டைப் பலபடுத்த வேண்டுமாக இருந்தால் நாட்டை முறையாக திறக்க வேண்டும் எனவும் கூறினார்.

27 minute ago
32 minute ago
39 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
32 minute ago
39 minute ago
2 hours ago