J.A. George / 2021 ஜூன் 09 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கு தேவைப்படும்6 இலட்சம் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகளை வழங்க ஜப்பானிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜப்பான் பிரதமரிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தியாவிடம் இருந்து அஸ்ட்ரா செனெகா தடுப்பூசி பெற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கைகளை இந்தியா இடைநிறுத்தியது.
இதனையடுத்து, இலங்கையில் அஸ்ட்ராசெனெகா முதல் டோஸ் செலுத்தியவர்களுக்கு இரண்டாவது டோஸ் செலுத்துவதில்பிரச்சினை ஏற்பட்டது.
இவ்வாறான நிலையில், பற்றாக்குறையாகவுள்ள 6 இலட்சம் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை வழங்குமாறு ஜப்பானிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago